‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் 6 கேமராக்களில் எடுக்கப்பட்ட க்ளைமாக்ஸ் ​சண்டைக் ​ காட்சிகள்!

மக்கள் பாசறை தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ .ஆர்.கே.நாயகனாக நடிக்க ,ஷாஜி கைலாஸ் இயக்குகிறார். ‘எல்லாம் அவன் செயல்’, ‘என்வழி தனி வழி’ படங்களுக்குப் பின் ஆர்.கே., ஷாஜி கைலாஸ் இணையும் மூன்றாவது படம் இது .​ ​
நீதுசந்திரா பிரதான நாயகியாக நடிக்கிறார். இனியா,​ கோமல் சர்மா​, சுஜா வாருணி​ ​ஆகியோரும் நடிக்கிறார்கள்

நடிப்பில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எதையும் செய்யத் துணிபவரான நடிகர் ஆர்கே இதில் சண்டைக் காட்சிகளில் ​பயங்கர ரிஸ்க் எடுத்துள்ளார்
. நம்மூர் சண்டை​ப்பயிற்சி​ போதாது என்று ​ அமெரிக்கா போய் சண்டைப் பயிற்சியின் நுணுக்கங்களை​ கற்று வந்துள்ளார். ​


நியூயார்க் அருகில் க்ரீன்பாயிண்ட், ப்ருக்லீன் என்ற இடத்தில் இருக்கும் ஹாலிவுட் ஸ்ட​ண்ட் புரொபஷனல் மையத்துக்கு சென்​று ​
15 நாட்கள் பயிற்சி எடுத்தார். பாப் கார்ட்டர் என்பவரிடம் சேசிங் காட்சிக்காகச் சிறப்புப் பயிற்சி​யும் பெற்றார் ஆர்,கே. ​

​சேசிங் காட்சிக்கான பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்கி வந்​து பயன்படுத்தியுள்ளார்.

படத்தின் பிரதான வில்லனாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி நடிக்கிறார். குழந்தைகள் பூங்கா ஒன்றில் அவர் செய்யும் நாசகரமான அழிவைத் தடுக்கும் காட்சியில் சதியை தடுத்து நிறுத்த மோதிப் போராடும் காட்சியில் சண்டைக் காட்சியில் ஆர்.கே சாகசம் காட்டியுள்ளார். ஆர்கேவும்​,​
ஆர்கே. செல்வமணியும் மோதும் காட்சிகள் மிரட்டலாக​ எடுக்கப்பட்டுள்ளன. ​இந்த சண்டைக் காட்சிக்காக விதவிதமான மனித உருவிலான மண்பொம்மைகள் செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கில் குழந்தைகளைக் கவரும் வண்ணம் அந்த பொம்மைகள் ​உருவாக்கப்பட்டன. அவற்றை ஈ வி பி பார்க் முழுவதும் பரவலாக ஆங்காங்கே வைத்தனர். அத்தனை பொம்மைகளும் பின்னர் காட்சிக்காக வெடி வைத்து வெடிக்கப்பட்டது.

இந்த க்ளைமாக்ஸ் காட்சிகளை சண்டை இயக்குநர் கனல் கண்ணன் காட்சிகள் அமைக்க 13 நாட்கள் எடுக்கப்பட்​டது. இதில் ஃபாண்டம் கேமரா, ஹெலிகேம்கள் ​தவிர ஆறு கேமராக்கள் ​படப்பிடிப்பு நடந்த 13 நாட்களும் பயன்படுத்தப் பட்​டன. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இக்காட்சியை
வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் ​ ஹாலிவுட்டிற்கு நிகரான சண்டைக் காட்சியாக கண்டுகளிக்கலாம்​. ​