சமயம் பார்த்து விக்ரமை பழிதீர்த்த தாணு..!

கலைப்புலி தாணு.. தமிழ்சினிமாவின் பிரமாண்ட படங்களை தயாரிப்பதற்கென்றே உருவெடுத்தவர். தற்போது ரஜினியின் ‘கபாலி’யையும் விஜய்யின் ‘தாறுமாறு’ படத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார் என்றால் சும்மாவா..? தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருக்கும் தாணு மலேசியாவில் ‘கபாலி’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

இருந்தாலும் இங்கே உள்ள சில பிரச்சனைகளில் தலையிட்டு காய் நகர்த்தி வருவதாகவும் சொலப்படுகிறது. விக்ரமின் படம் ஒன்று டேக் ஆப் ஆகும் முன்னரே, அதன் பெட்ரோல் டேங்கை லீக் பண்ணி தரையிலே தடுத்து நிறுத்தியது கூட அதில் ஒன்றுதான் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

தாணு தயாரித்த ‘அரிமா நம்பி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ஒரே படத்தில் திறமையான இயக்கனர் என்று புகழ் வெளிச்சம் பெற்றவர் தான் ஆனந்த் சங்கர்.. இவர் தனது அடுத்த படத்தின் கதையையும் தாணுவிடம் சொல்ல, இதையும் நானே பண்ணுகிறேன்.. நல்லா டெவலப் பண்ணு என அதற்கான வசதிகளை செய்து கொடுத்திருந்தாராம் தாணு..

விஜய் படம் மட்டுமே அப்போது அவரது தயாரிப்பில் இருந்தது.. ஆனால் நாட்கள் சென்றதே தவிர தாணு சைடில் இருந்து இந்தப்படத்தை ஆரம்பிபதற்கான அறிகுறிகள் எதையும் காணோம். திடீரென கபாலி படத்தை ஒகே பண்ணிய தாணு, அதில் பிஸியாகிவிட்டார்.

இதனால் என்னடா பண்ணுவது கையை பிசைந்துகொண்டிருந்த ஆனந்த் சங்கரை, வாங்க ஐங்கரனுக்கு போவோம் என அழைத்துச்சென்றாராம் விக்ரம். ஐங்கரனும் ஆஹா பேஸா ஆரம்பிக்கலாமே என ஆரம்பகட்ட ஏற்பாடுகளை செய்து தந்தவர்கள், இப்போது திடீரென இதில் இருந்து பின்வாங்கி விட்டார்களாம்.

இது விக்ரம்-ஆனந்த் சங்கர் தரப்புக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளதாம். ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் தோல்விதான் இந்த புராஜெக்டை அப்படியே கிடப்பில் போட காரணம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் அது இல்லை என்றும் இதன் பின்னணியில் தாணுவின் ரிமோட் கண்ட்ரோல் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அவர்தான் இந்தப்படத்தை தயாரித்தால் பின்னாளில் ரிலீசின்போது தேவையில்லாத சிக்கல் வரும் என்று சொன்னதால் ஐங்கரன் பின்வாங்கியதாக சொல்லப்படுகிறது.

அதாவது நானே தயாரிக்கிறேன் என தாணு சொன்ன பிறகும் விக்ரம்-ஆனந்த் சங்கர் இருவரும் ஐங்கரனுக்கு இந்தக்கதையை படம் பண்ண முயற்சித்ததில் தாணுவுக்கு உடன்பாடில்லையாம். தன்னால் வளர்ந்த இயக்குனர் தனது இரண்டாவது படத்திலேயே தன்னை உதாசீனப்படுத்துவதை தாணுவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள் சிலர்.

இன்னும் சிலரோ ‘கந்தசாமி’ படம் பண்ணும்போது விக்ரமால் தனக்கு ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு சரியான நேரத்தில் தாணு பழிதீர்த்துக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.. எது உண்மையோ, ஆனால் படம் நின்றது மட்டும் உண்மை என்று உறுதியாக சொல்லப்படுகிறது.