பதுங்கிய புலி… கொண்ட்டாட்டம் போடும் பூனை..!

பெரிய நடிகர்கள் இரண்டு அல்லது மூன்று பேரின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகலாம்.. காரணம் அவரவர்க்கு தனித்தனி ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. கூடவே பொதுவான ஆடியன்சும் சேரும்போது, ஒவ்வொரு படமும் தனித்தனியாக ஓரளவு கல்லா கட்டிவிடும்..

ஆனால் ஒரு பெரிய நடிகரின் படத்துடன் மீடியமான அல்லது சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸானால் அவற்றின் கதி அதோ கதிதான். என்னதான் நல்ல படமாக இருந்தாலும் கூட தியேட்டர்கள் குறைவாகத்தான் கிடைக்கும்.. கூட்டமெல்லாம் பெரிய ஹீரோ படத்துக்குத்தான் போகும். இது எழுதப்ப்படாத விதி.

அந்தவகையில் விஜய்யின் புலி படம் வரும் செப்-17 அன்று ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. சரி விஜய் தனிக்காட்டு ராஜாவாக வருவார் என பார்த்தால், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தையும் அன்றைய தினமே வெளியிடுவதாக அறிவிப்பு செய்தார்..

புலி வரும் நேரத்தில் நாம் பூனை போல குறுக்கே போகிறோமே என பயந்து நடுங்கினார் ஜி.வி.பிரகாஷ். காரணம் இந்தப்படமும் ஓரளவு ஓடினால் தான், இரண்டு வெற்றிப்படங்களின் ஹீரோ என்கிற புதிய இமேஜ் உருவாகும். பியூச்சரும் நன்றாக இருக்கும் என்பது அவரது எண்ணம்.