தங்கமகனிடம் கெத்து காட்டும் உதயநிதி..?

மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ள உதயநிதி ரசிகர்களிடம் ஓரளவு நன்றாகவே அறிமுகம் ஆகியுள்ளார் தான். ஆனால் இந்த அறிமுகமே தனுஷ் போன்ற ஒரு வசூல் ராஜாவின் படத்தை எதிர்த்து நிற்க போதுமானதா என்பது சந்தேகத்திற்குரியதுதான். ஆனால் அதைத்தான் உதயநிதி இப்போது செய்து வருகிறார். தற்போது தான் நடித்துள்ள ‘கெத்து’ படத்தின் ட்ரெய்லரை வரும் நவ-27 அன்று ரிலீஸ் செய்கிறார் உதயநிதி..

ஆனால் அந்த தேதியில் தான் தனது ‘தங்கமகன்’ ஆடியோ ரிலீசை நடத்துவதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார் தனுஷ். இதுவாவது ஏதேச்சையாக நடந்தது என்று சொன்னாலும் தனது படத்தை தனுஷின் தங்கமகன் வெளியாகும் டிச-18 அன்றுதான் ரிலீஸ் செய்யப்போகிறாராம். தனுஷுக்கு போட்டியாக உதயநிதி காய் நகர்த்துகிராரோ என்கிற சந்தேகத்தை தான் அவரது செயல் ஏற்படுத்தியுள்ளது.