சிவாஜிக்கு மணிமண்டபம் ; விஜயகாந்த் தான் செய்யலை.. அப்ப சரத்குமாராவது செஞ்சிருக்கணும்ல…!

நடிகர் திலகம் சிவாஜிக்கு அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வரவேற்கத்தக்க விஷயம் தான். இதில் என்ன வருத்தம் என்றால் 2002லேயே மணிமண்டபம் கட்டிக்கொள்ளுங்கள் என அப்போதைய அதிமுக அரசு இடம் ஒதுக்கித்தந்து, அதை திரையுலகத்தினர் யாரும் முன்னின்று ஆரம்பிக்காததால் இத்தனை வருடம் கழித்து அரசே அதை கட்டித்தருவதாக சொல்லியிருப்பதுதான்.

2002ல் இதற்காக இடம் ஒதுக்கப்பட்டபோது அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முயற்சியில் இருந்த, நடிகர்சங்க தலைவர் விஜயகாந்த் இதனை சரியாக திட்டமிட்டு ஆரம்பிக்கலாம் என நினைத்து கொஞ்சம் நாள் தள்ளிப்போட்டார்.. ஆனால் அதன்பின் அவர் தீவிர அரசியலில் இறங்கியதும், நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்தும் விலகினார்..

ஆனால் அடுத்து பதவிக்கு வந்த சரத்குமார், ஆளுங்கட்சிக்கு இணக்கமாக இருந்தும் கூட இத்தனை வருட காலம் மன்மண்டபம் கட்டுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லையே என்பது தான் திரையுலகினருக்கும் சிவாஜி குடும்பத்தினருக்கும், நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் வருத்தமாக இருந்தது. இது தற்போது வெளியான முதல்வரின் அறிவிப்பால் தீர்ந்தது என்றே சொல்லலாம்.