குயிலுக்கு இருக்கும் பெருந்தன்மை மயிலுக்கு இல்லாமல் போனது ஏனோ..?

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சில படங்கள் தோல்வி அடைவதும் படத்தை வாங்கி வெளியிட்ட சில விநியோகஸ்தர்கள் நட்டத்தை ஈடுகட்டுங்கள் என போராட்டம் நடத்துவதும் சகஜம் தான். ஆனால் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்துள்ள முக்கியமான நடிகர்களோ, டெக்னீசியன்களோ தங்களுக்கு ஏதேனும் கொஞ்சம் பாக்கித்தொகை வரவேண்டி இருந்தால் கூட, நாகரிகம் கருதி கேட்காமல் ஒதுங்கிக்கொள்வார்கள்.

புலி படத்தில் விஜய், ஸ்ருதிஹாசன் உட்பட சிலர் அப்படித்தான் தங்களது பாக்கியை விட்டுக்கொடுத்துவிட்டார்கள். தயாரிப்பாளர் விஜய்க்கு நெருங்கியவர் என்பதால் கூட விஜய் விட்டுக்கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் ஸ்ருதிஹாசன் விட்டுக்கொடுத்திருப்பது நிச்சயம் பெருந்தன்மையான ஒன்றுதான்.

ஆனால் இங்கிருந்து சம்பாதித்துவிட்டு வடநாட்டில் போய் செட்டில் ஆன மயிலு, இவ்வளவு விஷயங்களை தெரிந்துகொண்டும் கூட, தனக்கு இன்னும் ஐம்பது லட்சம் சம்பள பாக்கியை கேட்டு நெருக்கடி கொடுத்ததை என்னவென்று சொல்வது.. யாரை நொந்து கொள்வது.. கிழட்டு மயிலை அழைத்து வந்து நடிக்க வைத்த சிம்புதேவனையா.? இல்லை அதற்கு மூன்று கோடிக்கு மேல் சம்பளம் பேசிய புலி தயாரிப்பார்களையா..? ஐயோ.. ராமா..

அது சரி மயிலு (தெரியும்).. அதென்ன குயிலு என கேட்கிறீர்களா..? ஸ்ருதி தான் நன்றாக பாடுவாரே.. அதனால் ஒரு ரைமிங்கிற்காக குயிலு என சொல்லியுள்ளோம்.