இயக்குனர் முடிவில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் பிரகாஷ்ராஜ்..!

பிரகாஷ்ராஜ் இளையராஜாவின் தீவிரமன ரசிகர், தோனி, உன் சமயலறையில் என தான் இயக்கிய படங்களுக்கு கூட அவரையே இசையமைக்க வைத்தார். ஆனால் அடுத்தவர் டைரக்சனில், அடுத்தவர் தயாரிப்பில் இவர் நடிக்கும்போது, அதற்கும் கூட இளையராஜா தான் இசையமைக்கவேண்டும் என அடம்பிடித்தால் எப்படி..?

தற்போது பிரபுதேவா துவங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம், பிரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். இவரை ஒப்பந்தம் செய்வதற்கு முன்னரே ஏ.ஆர்.ரகுமானை ஒப்பந்தம் செய்துவிட்டார் பிரபுதேவா.

ஆனால் பிரகாஷ்ராஜோ எனக்கு இளையராஜா தானே செட்டாகும்.. ஏன் ரகுமானை ஒப்பந்தம் செய்தீர்கள் என்கிறாராம். இயக்குனரின் முடிவில் தேவையில்லாமல் தலையிடுவது ஒரு நடிகருக்கு அழகல்ல என்பது இன்னொரு இயக்குனராக மாறிய பிரகாஷ்ராஜுக்கு எப்படி தெரியாமல் போனது என ஆச்சர்யப்படுகிறது படக்குழு..