திருட்டு விசிடி பிரச்சனை; பார்த்திபனை கடுப்பாக்கிய கேள்விகள்

parthiban_ktvi

உலக சினிமா வரலாற்றிலேயே தமிழ் சினிமா தான் அதிக நவீன தொழில்நுட்ப வசதி கொண்டதாக இருக்கிறது. எந்த விதத்தில் தமிழில் ஒரு படம் திரைக்கு வரும் முன்பே அதை திருட்டு விசிடியில் சம்பந்தப்பட்ட இயக்குநர்களிடமே பேரம் பேசும் அளவுக்கு வந்திருக்கிறது இன்றைய தமிழ் சினிமா படங்களில் நிலை. நீண்ண்ண்ண்ண்ட வருடங்களாகவே நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்க, விநியோகஸ்தர்கள் சங்கம் என மூன்று சங்கங்களும் மாறி மாறி மாறி மாறி மனு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் அரசிடமும், காவல் துறையினரிடமும் ஆனால் இன்றுவரை அதை தடுப்பதற்காக ஒழுங்குமுறை வரவேயில்லை என்பது தான் கவலை…

நேற்றும் இதே பஞ்சாயத்து தான் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் எடுத்து வைத்தார் இயக்குநர் பார்த்திபன். அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வெற்றி பெற்றிருப்பதால் அந்த சந்தோஷத்தை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள ஒரு பிரஸ் மீட் வைக்கப்பட்டது. இதில் படத்தை பற்றி பேச வந்த பார்த்திபன் கூடவே அவரது இயக்கத்தில் வெளிவந்த கதிவஇ படத்தின் திருட்டு விசிடியையும் எடுத்துக் கொண்டு வந்தார். இந்த சிடி 30 ரூபாய்க்கு பஜாரில் விற்கிறார்கள். இந்த சிடி எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள படத்தை உருவாக்கிய நாங்கள் QUBEக்கு 50 ஆயிரம் கொடுக்க வேண்டுமாம். என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நிரூபர் நீங்க இதையேத்தான் ரொம்ப வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க, எங்ககிட்ட சொன்னா நாங்க தடுத்திட முடியுமா, எங்களால் செய்தியை மக்களுக்கு தெரிவிக்க மட்டுமே முடியும் என்று கூறினார். இந்த விவாதத்தில் தடையிட்ட மனுஷ்யபுத்திரன் படம் சம்பந்தமாக பேசாமல் ஏதேதோ பேசிக் கொண்டு போக பத்திரிக்கையாளர்கள் கடுப்பாகி அவரது பேச்சை நிறுத்துமாறு கூச்சலிக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்துல பிரசாத் லேப் பார்லிமெண்ட் மாதிரி ஆனது. ஆனால் இதற்கு கொஞ்சமும் முகம் சுளிக்காமல் புன்னகை முகத்துடன் பத்திரிக்கையாளர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார் பார்த்திபன்…