‘கபாலி’யில் ரஜினி கேரக்டர் ; வெளியான சீக்ரெட்..!

வாவ்.. ‘கபாலி’ படத்தை பற்றிய சூப்பர் சீக்ரெட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் ஏற்கனவே வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் இருந்த ரஜினியின் கெட்டப்புகளை வைத்தும, அரசால் புரசலாக வெளியான செய்திகளை வைத்தும் ரஜினி வடசென்னையை சேர்ந்த தாதா என்றும், இங்கிருந்து மலேசியாவுக்கு அவரது தயவால் பிழைக்கப்போன தமிழர்கள் அங்கே சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களை மீட்க மலேசியா செல்கிறார் என்றும் தான் சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் இப்போது லேட்டஸ்டாக கபாலி யார் என்கிற சீக்ரெட் கசிந்துள்ளது. இதில் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறாராம் ரஜினி.. அந்த விஷயம் கசிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தாதா என்கிற கோணத்தில் வேண்டுமென்றே செய்திகளை கசிய விட்டாராம் ரஞ்சித்.

அப்போதுதான் படம் பார்க்கவரும் ரசிகர்களுக்கு ரஜினியின் போலீஸ் அவதாரம் சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என நினைத்தாராம் ரஞ்சித். ஆனால் இப்போது ரஜினியின் கேரக்டர் என்னவென்று லீக்காகி உள்ளதால் அப்செட்டில் இருக்கிறாராம் ரஞ்சித்.