ஆசைப்பட்டு அல்வா கிண்டி வாயில் வைக்கமுடியாத சுகர்பேஷண்டான பாண்டிராஜ்..!

தமிழ் சினிமாவில் டைட்டில் வைக்கும் ட்ரெண்டில் இப்போது புதிய யுக்தி ஒன்றை கையாளுகிறார்கள் சில இயக்குனர்கள்.. அதாவது, தங்களுக்க்கு பிடித்த டைட்டில் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்று தெரிந்தாலும் கூட, கொஞ்சமும் தயங்காமல் அதையே டைட்டிலாக வைத்து விடுகிறார்கள்.

கிட்டத்தட்ட ஆடியோ ரிலீசெல்லாம் முடிந்து சென்சார் போகும் வரை அந்தப்படத்தின் பெயரிலேயே படத்தை விளம்பரப்படுத்துகிறார்கள்.. அதன்பின் ரிலீஸ் நேரத்தில் தான் வரிவிலக்கு கிடைக்காது என்கிற ஞானோதயம் வந்து அவசர அவசரமாக ஏதோ ஒரு தமிழ்ப்பெயரை டைட்டிலாக வைகிறார்கள்.

ஆனால் உண்மையில் அவர்கள் என்ன நினைத்து ஆரம்பத்தில் டைட்டில் வைத்தார்களோ, அது அவர்களை பொறுத்தவரை சரியாக ஒர்க் அவுட் ஆகிவிடும்.. என்னதான் பெயர் மாற்றினாலும் கூட ரசிகர்கள் தங்கள மனதில் பதிந்த பழைய பெயரிலேதான் அந்தப்படத்தை குறிப்பிடுவார்கள்.. அழைப்பார்கள்.

சில மாதங்களுக்கு முன் சூர்யா நடித்த ‘மாஸ்’ படத்திற்கு இந்த டைட்டில் மாற்றிய கூத்து, மிகப்பெரிய கேலிக்கூத்தாக நடந்ததது தெரியும் தானே.. இப்போது அதே சூர்யாவின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘ஹைக்கூ’ படத்திற்கு, ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கும்போதே, பெயர் மாற்றவேண்டிய சிக்கல் வரும் என்பது இருவருக்குமே தெரியும்..

ஆனாலும் ஏன் வைத்தார்கள் என்றால் பப்ளிசிட்டிக்காத்தான். இப்போது வரிவிலக்கு பெறுவதற்காக வேறு டைட்டிலை தேடிவருகிறார்களாம். ஆனாலும் பாண்டிராஜ் இந்த ‘ஹைக்கூ’ டைட்டிலை ரொம்பவே ஆசைப்பட்டு வைத்தாராம். ஆனால் இப்போது வரிவிலக்கு பெறுவதற்காக டைட்டிலை மாற்றவேண்டி இருப்பதால், ஆசைப்பட்டு அல்வா கிண்டி வாயில் வைக்கமுடியாத சுகர்பேஷண்டின் நிலையில் இருக்கிறாராம் பாண்டிராஜ்