அஜித்தை கழுத்தறுத்தார் இயக்குனர்..! அஜித்தின் காதை அறுத்தார் எடிட்டர்..!

நேற்று நள்ளிரவு அஜித்தின் ‘வேதாளம்’ பட டீசர் வெளியானது.. கொஞ்ச நேரத்திலேயே அஞ்சு லட்சம் லைக்குகளை தாண்டிவிட்டது என ஏதேதோ கணக்குகளை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் டீசரின் ஆரம்பத்தில் அஜித்தின் பற்களை பார்த்து பலருக்கும் பயம் ஏற்பட்டிருக்கும் என்பது உண்மை..

டீசரின் இறுதியில் அஜித் லிப்ட்டில் நின்றுகொண்டு தெறிக்க விடலாமா என கேட்கிறார் (இப்படித்தான் ‘மாசு’ படத்திற்கும் ஆடியோ ரிலீஸுக்கு தெறிக்கவிடுகிறோம் என சொன்னார்கள்..சொன்னவர்கள் தெறித்து போனார்கள்).. யாரை..? ரசிகர்களையா..? தியேட்டரை விட்டா..? என மற்றவர்கள் ஓட்டுவது ஒருபக்கம் இருக்க, அந்த கடைசி ஷாட்டை கவனித்தவர்களுக்கு ஷாக் நிச்சயம்.

பின்னே அஜித்தின் இரண்டு காதையும் காணோமென்றால் அதிர்ச்சியாக இருக்காதா..? அஜித்தின் தலையை வேறு ஒரு உடம்பில் பொருத்தி வி.எப்.எக்ஸ் செய்திருப்பார்கள் போல.. அதுதான் அந்த அவசர அடியில் காதை ஓட்ட வைக்க மறந்துவிட்டார்கள் என்று தெரிகிறது..

இல்லை என்றால் ஒருவேளை வேதாளம் படத்தில் வேதாளமாக மாறும் விஜய்க்கு கோபத்தில் கோரைப்பல் முளைப்பதுபோல, இந்த வேதாளம் அஜித்துக்கு சிரித்தால் காது மறைந்து விடுகிறதோ என்னவோ..? விஜய்யின் படத்தில் முழுமூச்சாக பேசப்படும் வேதாளம் என்கிற பெயரை டைட்டிலாக வைத்து இயக்குனர் சிவா அஜித்தின் கழுத்தறுத்தார். இப்போது படத்தின் வி.எப்.எக்ஸ் எடிட்டர் அஜித்தின் காதுகளையே அறுத்துவிட்டார்.

(மேலே உள்ள படத்தில் காதுகள் உள்ள அஜித்துடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்)