அஜித்துக்கு தெரியாமல் தான் இது நடந்ததா..?

நீதானே என் பொன் வசந்தம் படம் ஊத்தி மூடிக்கொண்டதும் சிம்புவை ஹீரோவாக வைத்து தனது புதிய படத்தை ஆரம்பித்தார் கௌதம் மேனன். இது நடந்தது 2௦13 இறுதியில். அப்போது சூர்யா படம் ட்ராப் ஆன வருத்தம் ஒரு பக்கம், அஜீத்துடன் நடந்த பேச்சு வார்த்தை நிலுவையில் இருந்தது ஒரு பக்கம் என சோகத்தில் இருந்த கௌதம் மேனன் கடைசியாக போய் நின்றது சிம்புவிடம்தான்.

தன்னை வைத்து ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர் கௌதம் என்பதாலும், அவ்வளவு பெரிய டைரக்டர் தன்னைத்தேடி வந்திருக்கும்போது தானும் அவரை கைவிடுவது நன்றாக இருக்காது எனவும் நினைத்த சிம்பு, கௌதம் படத்தில் நடிக்க ஓகே சொன்னார். ஆனால் அதை தொடர்ந்து பாதிப்படம் முடிந்த நிலையில் அஜித்திடம் இருந்து கௌதம் மேனனுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்தது..

மிகப்பெரிய வாய்ப்பு. அதை பயன்படுத்திக்கொண்டால் மீண்டும் இண்டஸ்ட்ரியில் வலுவாக கலை ஊன்றிக்கொள்ளலாம்.. இதையெல்லாம் யோசித்த கௌதம் மேனன், சிம்புவிடம் மெதுவாக விஷயத்தை கொண்டுபோனதாகவும், முதலில் யோசித்த சிம்பு, பின்னர் தனது ‘தல’ படம் என்பதால் சரி போய்வாருங்கள் என அனுப்பி வைத்தார் என்றும் அப்போது பலவாறான செய்திகள் பரவின. இதுபற்றி கௌதம் மேனன், சிம்பு இருவருமே வாய் திறக்காமல் இருந்தனர்.

இப்போது அஜித் படத்தை ரிலீஸ் பண்ணிவிட்டு மீண்டும் சிம்பு படத்துக்கே வந்துவிட்டார் கௌதம். ஆனால் சிம்பு நினைத்தது என்னவென்றால் கௌதம் அஜித் படத்தை இயக்கும் அந்த நேரத்தில் பாண்டிராஜின் டைரக்சனில் தான் நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை முடித்து ரிலீஸ் செய்தால் அந்த கேப்பை பில் பண்ணிவிடலாம் என திட்டமிட்டார்.

ஆனால் ‘வாலு’ படம் போல ‘இது நம்ம ஆளு’ படமும் எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியாமல் நிற்கவே மனம் நொந்து போனார் சிம்பு. இன்று சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’ இசைவெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, கௌதம் மேனன் தனது படத்தை பாதியில் விட்டுவிட்டு போனதை உடைத்து உறுதிப்படுத்திவிட்டார். அத்துடன் சிம்புவின் தந்தை டி.ஆர் அந்த சமயத்தில் கௌதம் இப்படி விலகிப்போனபோது. என்னப்பா இப்படி செய்யலாமா என வருத்தப்பட்டதாகவும், தான் அவரை சமாதனப்படுத்தியதாகவும் கூறினார் சிம்பு.

பொதுவாக அஜித் மற்றவர்களை காயப்படுத்தும் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டார். அப்படி இருக்கையில் சிம்பு படத்தை கௌதம் மேனன் இயக்கி வருவதும், தான் கூப்பிட்டதும் அவர் அதை பாதியில் விட்டுவிட்டு வருவதும் அஜித்துக்கு எப்படி தெரியாமல் போயிற்று.? அப்படி தெரிந்திருந்தால் அஜித் எப்படி அதற்கு ஒத்துக்கொண்டார் என பல கேள்விகள் நமக்குள்ளும் எழத்தான் செய்கின்றன.