அஜித் பேரை சொன்னாலே தடை விலகுதா..? இது என்னடா புது கரடி..!!

புதிதாக உருவாகியுள்ள பேய்ப்படம் ஒன்றுக்கு ‘டெய்சி’ என பெயர் வைத்தார்கள்.. அந்தப்படத்தின் தலைப்பு அன்னியமாக தெரிந்ததாக சிலர் கூற, உடனே ‘என்னை அறிந்தால்’ படத்தின் சூப்பர்ஹிட் பாடலில் இருந்து ‘உனக்கென வேணும் சொல்லு’ வரிகளை மட்டும் எடுத்து அதை படத்தின் டைட்டிலாக வைத்துவிட்டார்கள்.. ரைட்.. இதுவரை ஒகே தான்.

ஆனால் சமீபத்தில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அந்தபடத்தின் இயக்குனர் சொன்ன தகவல்கள் எல்லாம் “கண்ணாடிய திருப்பி வச்சா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்” என்கிற டைப்பில் புது தினுசாக உள்ளது..

படத்திற்கு பெயரை மாற்றி வைத்ததுமே, இந்தப்படத்திற்கு ஏற்பட்ட எல்லா தடங்கல்களும் விலகி பட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று படம் இப்போது ரிலீஸுக்கும் தயாராகி விட்டதாம். அப்படின்னா இனிமே அஜித் படங்கள் சம்பந்தப்படுற மாதிரி டைட்டில் வச்சா சிக்கல் வராதுன்னு சொல்றாரா என்ன.?

இத்தனை நாளா சிம்பு கூட அஜித் பேரைத்தான் சொல்லிக்கிட்டு இருந்தார். ஆனா விஜய் வந்துதானே படத்தை ரிலீஸ் பண்ண வச்சார்..? ஏங்க கரடி விடுறதுக்கும் ஒரு அளவு வேணாமா..?