“ஒரு தியேட்டரில் இரண்டு ஸ்கிரீன் வேண்டாம்” ; சித்தார்த் காட்டம்..!


முன்பு ஒரு படம் சரியாக ஓடாவிட்டால் மீடியாவை குற்றம் சாட்டினார்கள்.. விமர்சனம் எழுதி வசூலை கேடுத்துவிடுகிறோம் என்று.. ஆனால் இப்போது சோஷியல் மீடியா வந்தபின் படம் பார்க்கும் ரசிகர்களே, படம் பிடிக்கவில்லை என்றால் உடனுக்குடன் ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் மூலம் படத்தை கிழி கிழி என கிழித்து விடுகின்றனர். நேற்று வெளியான இருமுகன்’ படத்திற்கும் இதுதான் நடந்து வருகிறது.

இதை பண்ணவேண்டாமே என காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த். ஒரு படத்தை பார்த்து முடித்தவுடன் விமர்சனம் செய்யுங்கள் அதை வரவேற்கிறோம். ஆனால், படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே விமர்சனங்களை ட்வீட் செய்வது தகுமோ? இத்தகைய விமர்சனங்கள் திருட்டு டிவிடிக்களைப் போலவே சட்டவிரோதமானது. திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்களால் ட்வீட் செய்ய முடிகிறது என்றால் உங்கள் மூளை சினிமா திரை அல்லது மொபைல் திரை என இரண்டில் ஏதாவது ஒன்றின் மீது மட்டும் கவனம் செலுத்தும். அது சினிமா திரையாக இருக்கலாம் அல்லது உங்களது மொபைல் திரையாக இருக்கலாம். தயவு செய்து சினிமா திரையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்” என குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் சித்தார்த்.